Translate

பிளாஸ்டிக் அரிசியை விற்பனை செய்தால் கிரிமினல் நடவடிக்கை உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை

பிளாஸ்டிக் அரிசியை விற்பனை செய்தால் கிரிமினல் நடவடிக்கை உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை...


தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரிசி, சர்க்கரை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்த, உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக செய்தியகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், தெலுங்கானாவில் பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை அந்த மாநில உணவுபொருள் வழங்குதுறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். இதேபோல கர்நாடகாவிலும் ஒருசில கடைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனைக்கு வந்துள்ளதாக, ஆதாரங்களுடன் சிலர் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

பிளாஸ்டிக் அரிசி உடலுக்கு தீமையை விளைவிக்கும். பிளாஸ்டிக் அரிசி குறித்து 9444 042322 என்ற எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம். பிளாஸ்டிக் அரிசியை விற்பனை செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.


பிளாஸ்டிக் அரிசி கண்டுபிடிப்பது எப்படி

கொதிக்கும் நீரில் அரிசியை போடும் போது பிளாஸ்டிக் அரிசி உருகிவிடும். தண்ணீரில் போடும் போது அரிசி மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Latest
Previous
Next Post »